சமூக மாற்றமே நிரந்தரத் தீர்வு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சமூக மாற்றமே நிரந்தரத் தீர்வு!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு வழக்குரைஞர் தி. ஐங்கரன் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், முழுமையாகத் தீர்க்க முடியாமல் அரசும், மக்களும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவும், சிறுவயது முதலே தீய பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும் உள்ளனர். சிறு வயதிலேயே பெற்றோரால் விழிப்புணர்வு பெற்ற பெண்கள், 18 வயதைக் கடக்கும் போது தங்களைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பாகும். எனவே, இந்த சமூக மாற்றத்தின் தொடக்கம் முதலில் பெற்றோரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பெண்கள் இயற்கையாகவே மனதளவில் மென்மையானவர்கள். இதைப் பயன்படுத்தி அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்றும், திருமணத்துக்கு உதவுவது போன்றும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது போன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். அதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் பெண்களையும் பெரும் பாதிப்படைய வைப்பது இந்தக் கயவர்களின் திட்டமிட்ட செயலாகும். பள்ளிகளில் ஆண், பெண் சம உரிமை குறித்த விளக்கங்களைக் கொடுக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது கட்டாயம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளே வரும்காலத்தில் பெரும் மனித சமூகமாகும். அவர்களிடம் இந்த விழிப்புணர்வு பரவி பாலியல் வன்கொடுமை நடைபெறாமல் தடுப்பதிலும் சமூக மாற்றத்துக்கும் கல்வி நிறுவனங்களின் பங்கும் முக்கியமானதாகும். பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் வன்கொடுமையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை மட்டும் பாதிக்காது; அவருடைய குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகமும் பாதிப்படையும் என்ற செய்தியை இளைஞர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அது அவர்களை நல்வழிப்படுத்தும். மேலும், பெண்களை மதிக்கும் மனநிலையையும் உருவாக்கும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. திரைப்படங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளி போன்று சித்தரித்து காட்சிகளை அமைத்து வெளியிடாமலும், பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் எப்படி தற்காத்துக் கொள்வது என்றும், மீறி நடக்கும் நிலையில் சட்டத்தில் உள்ள வலிமையான தகவல்கள் பொதுமக்களை சேருமாறு காட்சிகளை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களைக் குறை கூறாமல், அந்தப் பெண்களுக்குப் பாதுகாப்பு, ஆதரவை வழங்குவது அவசியம். நிர்பயா வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்புகளை அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்தால், பெண்கள், கிராம மக்களிடையே தன்னம்பிக்கையையும் சமூக விழிப்புணர்வையும் அவை ஏற்படுத்தும். இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக 2012-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 2019-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட போக்úஸô சட்டம் பல்வேறு சிறப்பம்சங் களைக் கொண்டுள்ளது. 18 வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தச் சட்டத்துக்கு உட்பட்டவை. பாதிக்கப்பட்டவரின் பெயர், அடையாளம் வெளியிடப்படுவதில்லை. இது தொடர்பான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களிலும், விசாரணை தனியாகவும், மூடிய அறையிலும் நடைபெறும். குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து மரண தண்டனையும் வழங்கப்படும். இந்தச் சட்டம் தொடர்பாக கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் குற்றச்செயலில் ஈடுபடும் கயவர்கள் ஏழ்மையையும், வறுமையையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதன்மூலம் ஒட்டுமொத்த பெண் சமுதாயமும் விழிப்புணர்வு பெறும். இதன்மூலம் சமூக மாற்றம் ஏற்படும். அதனால், பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படும் வாய்ப்புள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் 28,046 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2021-ஆம் ஆண்டில் 31,677 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டில் 31,516 வழக்குகளும், 2023-ஆம் ஆண்டில் 29,670 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 27,721 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டதையடுத்து, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும், வழக்குகளும் சற்று குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பெண்களை மதித்தல்; சம உரிமை அளித்தல் போன்ற பண்புகளை ஆண்களுக்கு கற்றுத் தருவதன்மூலம் அவர்கள் மனநிலையில் மாற்றம் தொடங்கி அது சமூக மாற்றமாக உருப்பெறுகிறது. இந்த மாற்றமே முழுமையான சமூக மாற்றமாகும். பெண்களை மதிப்பதும், பெண் உரிமையைப் பாதுகாப்பதுமே உண்மையான ஆண்மையாகும். குடும்பத்தில் ஆண் - பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம பொறுப்பு வழங்குதல், பள்ளிகளில் ஆண், பெண் இருவருக்கும் சிறு வயது முதல் வகுப்பறையில் சமமாகப் பேச அனுமதித்தல்; ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை மதிக்கக் கற்றுக் கொடுத்தல். சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறாமல், அவர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் அளித்தல் அவசியம். பெண்களின் சுதந்திரத்தை மதிக்கும் மனித சமூகத்தை உருவாக்குவதன் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை