ரூபாயின் மதிப்பு வலுவடைந்து, இன்றைய வர்த்தக முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ.94.58 ஆக நிலைபெற்றது. இந்திய ரூபாய் | கோப்புப் படம் மும்பை: சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, டாலரின் மதிப்பு பலவீனமடைந்தது மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தது உள்ளிட்டவையால், தொடர்ந்து 2வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து, இன்றைய வர்த்தக முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ.94.58 ஆக நிலைபெற்றது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகளாவிய நம்பிக்கையை மேம்படுத்திய போதிலும், சாதகமான உள்நாட்டுப் பங்குச் சந்தை இந்திய ரூபாய்க்கு சாதகமாக அமைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.61 ஆக தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.50 சென்று பிறகு குறைந்தபட்சமாக ரூ. 94.87 ஆக இருந்தது. முடிவில், முந்தைய இறுதி நிலையை விட 17 காசுகள் உயர்ந்து ரூ. 94.58 ஆக நிலைபெற்றது. நேற்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ. 94.75 ஆக நிறைவடைந்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ. 94.58 ஆக நிறைவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗