டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு

டெட் தேர்வு எழுத வந்த ஆசிரியைகள். | கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன் கரூர்: டெட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஏற்கெனவே பணியில் உள்ள 55 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர், நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனிடையே, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்ட நிலையில், உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறாததால், ஆசிரியர்கள் பலரும் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 27 உயர் நிலைப் பள்ளிகள், 50-க்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள், 100-க்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ.மலைக் கொழுந்தன் தெரிவித்தது: 2022-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. பல அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாதது, மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமாக உள்ளது. இதுதொடர்பான வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை