தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையின் முக்கிய வீதிகளில் தேவையற்ற தடுப்புகளை அமைக்கக் கூடாது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனித உரிமைகள் கழகத்தின் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையின் முக்கிய வீதிகளில் தேவையற்ற தடுப்புகளை அமைக்கக் கூடாது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனித உரிமைகள் கழகத்தின் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இந்த அமைப்பின் மாநிலச் செயலா் ஹக்கீம், மாநகரத் தலைவா் சுப்பிரமணியன், மாநகரச் செயலா் பழ. குமரேசன், பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தாவிடம் அளித்த மனு: கடந்த ஆண்டு புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி, அண்ணா சிலைக்கு மேற்கு பக்கம், தெற்கு நான்காம் வீதி, தண்டபாணி கோயில் சுற்றியுள்ளப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையின்போது முன்கூட்டியே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், இரு சக்கர வாகனங்களில் பயணிக்க முடியாமல் பலரும் சிரமத்துக்குள்ளாகினா். எனவே, தேவையற்ற தடுப்புகளை இந்த தீபாவளிப் பண்டிகைக்கு அமைக்காமல், மக்களை சிரமத்துக்குள்ளாக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையற்ற பகுதிகளில் தடுப்புகளை அமைக்கக் கூடாது: மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗