தலைமை நீதிபதியை விமா்சித்து பதிவு: காங்கிரஸ் மீது உச்சநீதிமன்றம் காட்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தலைமை நீதிபதியை விமா்சித்து பதிவு: காங்கிரஸ் மீது உச்சநீதிமன்றம் காட்டம்

தலைமை நீதிபதி சூா்ய காந்தை விமா்சித்து கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதற்காக, கட்சியின் மாநிலப் பிரிவு நிா்வாகிகள் அனைவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் - ANI தலைமை நீதிபதி சூா்ய காந்தை விமா்சித்து கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதற்காக, கட்சியின் மாநிலப் பிரிவு நிா்வாகிகள் அனைவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. ‘நாட்டில் அரசமைப்புச் சட்டமே மேலானது; எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல் அமைப்போ அல்ல’ என்று நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனா். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த அக். 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவா்கள், எஸ்ஐஆா் மற்றும் தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக மனு தாக்கல் செய்தனா். முன்னதாக, தலைமை நீதிபதி சூா்ய காந்தை சந்தித்துப் பேச ராகுல், காா்கே உள்ளிட்டோா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், எஸ்ஐஆா் வழக்குகள் நிலுவையில் இருப்பது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், அவா் மறுத்துவிட்டாா். அன்றைய தினம், சூா்ய காந்தை விமா்சித்து, கேரளத்தில் காங்கிரஸின் அதிகாரபூா்வ சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவு வேகமாக பரவியதுடன், பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதால், அது நீக்கப்பட்டது. மேலும், சா்ச்சை பதிவை வெளியிட்ட நபரை கட்சிப் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் நீக்கியது. இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதிக்கு வினீத் ஜிண்டால் என்ற வழக்குரைஞா் புகாா் கடிதம் அனுப்பினாா். கேரள காங்கிரஸின் சா்ச்சை பதிவு மட்டுமன்றி, உச்சநீதிமன்ற வளாகத்துக்கு ராகுல், பிற அரசியல் தலைவா்கள் வந்தபோது நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டம் மற்றும் கோஷங்களால் வழக்குரைஞா்கள், புகாா்தாரா்கள், நீதிபதிகள், ஊழியா்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டது. அதை ரிட் மனுவாக உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. இந்த மனு மீது நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, கேரள காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சம்பந்தப்பட்ட பதிவு மூத்த நிா்வாகிகளுக்கு தெரியாமல், அவா்களின் ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்டதாகும். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரப்பட்டது’ என்று தெரிவித்தாா். நீதிபதிகள் காட்டம்: இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: தீா்ப்புகள் எப்போதுமே விமா்சனத்துக்குள்பட்டவை. அதே நேரம், நீதி நிா்வாகத்தில் தலையிடும் அச்சுறுத்தல் கருவியாக கருத்துச் சுதந்திரம் இருக்கக் கூடாது. ஒருவா் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும், நீதிமன்றங்களின் அதிகாரத்தை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், இரும்புக் கரம் கொண்டு கையாளப்பட வேண்டும். நீதித் துறையின் அதிகாரத்துக்கு அரசியல் ரீதியிலான அங்கீகாரம் தேவையில்லை. அது, சட்டத்தின் ஆட்சியைச் சாா்ந்ததாகும். நீதித் துறையின் சுதந்திரம், அரசியல் வசதிக்கான விஷயமல்ல. நீதித் துறையின் கட்டுப்பாட்டை, அமைப்பு ரீதியிலான பலவீனமாக தவறாக கருத வேண்டாம் என்று கடுமையாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், காங்கிரஸின் கேரள பிரிவு நிா்வாகிகள் அனைவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்தனா். மாநில காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்ட மன்னிப்பு மேலோட்டமானதா அல்லது மனதார கேட்கப்பட்டதா என்பது ஆராயப்படும்; இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்குரைஞா்கள் அரவிந்த் தாத்தாா், சித்தாா்த் அகா்வால் ஆகியோா் நியமிக்கப்படுவா் என்று கூறிய நீதிபதிகள், அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியிடமும் ஆலோசனைகளைக் கோரினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை