கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப்படம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வருகிற நவ. 24 ஆம் தேதி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா வருகிற நவ. 24 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடுவார்கள். நவ. 24 அன்று மாலை 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அன்று பக்தர்கள் மலையேற தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் தீபத் திருவிழாவின் போது மலை ஏற பக்தா்களுக்கு இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை மகாதீபம்: பக்தர்கள் மலையேறத் தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗