ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு மூலம் வழங்கப்பட்ட கௌரவத்துக்கு இளையராஜா நன்றியறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூர கிராமத்தில் பிறந்த தனக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள இந்த கௌரவம் நெகிழ்ச்சியளிப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார். விக்டோரியா மாகாண நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்வர் எர்டோகன், விக்டோரியா மாகாண அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், தனது இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்களுக்கும், தன்னுடன் பயணித்த கலைஞர்களுக்கும், பல தலைமுறை ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். I offer my sincere gratitude to the Honorable Enver Erdogan MP, Minister for Finance, Victorian Government, and the Members of Parliament for having my 50-year journey commemorated through a ceremonial stamp release. Being born in a small, remote village in Tamil Nadu and honored… pic.twitter.com/QXl4yQZURi 50 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள மற்றுமொரு கௌரவமாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கௌரவம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk