என்.சந்திரசேகரன் மறு நியமனம் தொடர்பான டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கு உச்ச நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டது தொடர்பான இரண்டு சர்ச்சைக்குரிய விவகாரங்களில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கு ஆதரவாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் நான்கு இயக்குனர்கள் வாக்களித்தனர். ஆனால், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவின் செல்லுபடித் தன்மை மற்றும் தலைவரின் 'காஸ்டிங் ஓட்' பயன்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பி.என். ஸ்ரீகிருஷ்ணா மற்றும் உதய் யு. லலித் ஆகிய இருவரின் சட்டக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, டாடா சன்ஸ் இந்த ஆட்சேபணைகளுக்குப் பதிலளித்துள்ளது. அவர்களின் கருத்துக்கள், மறுநியமன செயல்முறையின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் இயக்குனர் குழு கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தீர்மான வாக்கு ஆகியவை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. நீதிபதிகளின் சட்டக் கருத்துக்கள் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி உதய் யு. லலித் கூறுகையில், "தற்போதைய வழக்கில், இந்த முன்மொழிவின் மீது வாக்களித்த ஐந்து இயக்குனர் குழு உறுப்பினர்களில், நோயல் டாடாவைத் தவிர மற்ற நான்கு உறுப்பினர்களும் சந்திரசேகரனுக்கு தலைவர் பதவி வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சரத்து 104(பி)-ன் கீழ் நியமிக்கப்பட்ட இயக்குனர்களிடையே சமமான வாக்குகள் இருந்ததால், தலைமை தாங்கிய அல்லது தற்காலிகத் தலைவராக இருந்தவர் தனது காஸ்டிங் ஓட்டை செலுத்தியதன் மூலம் சரத்து 121-ன் கீழ் உள்ள தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்றார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா கூறுகையில், "என் கருத்துபடி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சரத்து 121-க்கு முற்றிலும் உகந்ததாக உள்ளது. இயக்குனர் குழுவின் நடவடிக்கைகள் எந்தவொரு சூழலிலும் முட்டுகட்டையாக முடிய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதனால்தான், இயக்குனர் குழுவின் நடவடிக்கைகளும், நிறுவனத்தின் வணிகமும் முன்னேறிச் சென்று திருப்திகரமாக முடிவடைவதை உறுதி செய்யும் வகையில் இந்தச சரத்தைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு இயக்குனருக்கும் இரண்டு கடமைகள் உள்ளன என்று நான் கருதுகிறேன். ஒன்று கம்பெனி சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் மீதான அவரது நம்பிக்கை சார்ந்த கடமை, மற்றொன்று அவரைப் பரிந்துரைத்த அமைப்பிற்கான கடமை. இதில் முரண்பாடு ஏற்படும் போது, முந்தைய கடமையே பிந்தைய கடமையை விட மேலோங்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் முந்தைய கடமை சட்டப்பூர்வமானது, பிந்தையது ஒப்பந்தம் சார்ந்தது மட்டுமே. இந்தச் சூழலில், வேணு சீனிவாசன் சட்டப்பூர்வ நம்பிக்கை சார்ந்த கடமையின்படி சரியாகச் செயல்பட்டுள்ளார்” என்றார். சரத்து 104பி-ன் கீழ் நியமிக்கப்பட்ட இயக்குனர்களிடையே சமமான வாக்குகள் இருந்ததால், தலைவருக்கு 'காஸ்டிங் வோட்' செலுத்துவதற்கான சூழல் நிச்சயமாக இருந்தது என்று நீதிபதி லலித் குறிப்பிட்டார். எனவே, செப்டம்பர் 17 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட்டது என்று அவர் கூறினார். கூட்டத்தில், இந்த முன்மொழிவு பரிசீலனைக்கு வந்தபோது சந்திரசேகரன் ஒதுங்கிக் கொண்டதை அடுத்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஹரிஷ் மன்வானி, மறுநியமனத்திற்கு ஆதரவாகத் தனது காஸ்டிங் ஓட்டைப் பயன்படுத்தினார். டாடா டிரஸ்ட்ஸ் தரப்பின் நிலைப்பாடு முன்னதாக, டாடா டிரஸ்ட்ஸின் நிலப்பாட்டை ஆதரித்து, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனியாக ஒரு சட்டக் கருத்தை வழங்கியிருந்தார். அதில், டாடா டிரஸ்ட்ஸ் பரிந்துரைத்த இயக்குனர்களின் உறுதிப்படுத்தும் ஆதரவு தேவை என்றும், இல்லாத பெரும்பான்மையை ஒரு தலைவரின் காஸ்டிங் வோட் மூலம் மாற்றிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். டாடா டிரஸ்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ஒட்டுமொத்த இயக்குனர் குழு அளவில் சமமான வாக்குகள் இருக்கும் இடத்தில் மட்டுமே தலைவரின் காஸ்டிங் ஓட் வசதி கிடைக்கும். டாடா டிரஸ்ட்ஸின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களுக்கு இடையே இது பொருந்தாது. வாக்களிப்பின் முடிவு 4:1 என்றோ அல்லது வேறு எந்த எண்களிலோ இருந்தது என்பது முக்கியமல்ல, ஒரு நிபந்தனை பூர்த்தி செய்யப்பட வேண்டும் அல்லது செய்யப்படக்கூடாது. இந்த வழக்கில் அந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்படவில்லை. டாடா சன்ஸ் நிறுவனத்தின் 'ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன்' (AoA), இயக்குனர் குழுவின் எந்தவொரு முடிவையும் வெறும் இயக்குனர்களின் தலை எண்ணிக்கைக்கு மட்டும் விட்டுவிடவில்லை. நிறுவனத்தில் சுமார் 66% பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸால் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களில் குறைந்தபட்சம் பெரும்பான்மையினரின் உறுதிப்படுத்தும் ஆதரவு இல்லையெனில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவை தெளிவுபடுத்துகின்றன. இது ஏ.ஓ.ஏ-ன் கீழ் உள்ள ஒரு தனி நிபந்தனையாகும். அடுத்தகட்ட நகர்வுகள் சந்திரசேகரனின் மறுநியமனம் குறித்த இறுதி முடிவு, வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மட்டுமே தெளிவாகும். மூத்த வழக்கறிஞர் சுதீப்தோ சர்க்காரின் கருத்துபடி, சரத்து 121-ஐ படிக்கும் போது, தலைவரின் காஸ்டிங் ஓட்டை பின்வரும் இரண்டு சூழல்களில் பயன்படுத்தலாம். அதன்படி, "சமமான வாக்குகள் இருக்கும் பட்சத்தில்" என்ற வெளிப்பாடு இந்த இரண்டு சூழல்களுக்கும் பொருந்தும் என்று புரிந்துகொள்ளப்படலாம். தலைவரை மீண்டும் நியமிக்கும் முன்மொழிவுக்கு சரத்து 118 பொருந்தாது. சரத்து 118 என்பது ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பானது மட்டுமே. தான் அடுத்த முறை போட்டியிடப்போவதில்லை என்ற தலைவரின் அறிவிப்பு, தற்போதைய தலைவர் என்ற அவரது தகுதியை மாற்றாது. பிப்ரவரி 2027-ல் அவரது தற்போதைய பதவிக் காலம் முடியும் வரை அவர் பதவியில் தொடர்வார்” என்று சர்க்கார் தெரிவித்தார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
டாடா குழுமத்தில் வெடித்த மோதல்: சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk