மத்திய அமைச்சர் ஷெகாவத், கீழடி அகழாய்வு அறிக்கையில் அடிப்படை தொல்லியல், அறிவியல் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். அவருடைய இந்தப்பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கீழடி அகழாய்வு அறிக்கையைத் தயாரிப்பதில் அடிப்படை தொல்லியல் விதிமுறைகளும், அறிவியல் முறைகளும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என விமர்சித்துள்ளார். அறிக்கையில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், அவற்றை சரிசெய்து அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தொல்லியல் அதிகாரியிடம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் ஷெகாவத் கூறியுள்ளார். A post shared by The Indian Express (@indianexpress) மேலும், அறிவியல் ஆதாரங்களுடன் அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டால், அதன் கண்டுபிடிப்புகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு வெளியிடும் என்றும் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
’கீழடி அகழாய்வில் குறைபாடுகள்..’ மத்திய அமைச்சர் ஷெகாவத் பேச்சால் சர்ச்சை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk