சிக்கிம் நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் அதிர்ச்சியே ஓயவில்லை. அதற்குள் சிக்கிமில் பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிம்பி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சதை பாறைகள், சதிகள் மலையில் இருந்து அடித்து வரப்பட்டு, கிராமத்தையே புரட்டி போட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பன வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லிங்திங், தடோங் உள்ளட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. முதல் தளம் வரை மழைநீர் புகுந்தது. ரிம்பி கிராமத்தில் நிலச்சரிவு அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு சிக்கிம், ரிம்பி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையில் இருந்து ராட்சத பாறைகள், சகதிகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. ரிம்பி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. கிராமத்தை இணைக்கும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, ரிம்பி கிராமம் தனித்தீவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கியால்சைங் மாம் ரிம்பி கிராமத்தில் கரையை ஒட்டி 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஆபத்தான இடத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டது. அவற்றில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை ஏற்கனவே பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்களையும் பாழகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது சிக்கிமில் சுற்றுலாவுக்கான முதல் சீஸன். ஆனால் மழை, வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து முடக்கம் ஆகியவற்றால் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவில் உயிரிழப்பு பதிவாகவில்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk