கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றபோது சூர்யவன்ஷி முதல் தரப் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரான 93 ரன்களைப் பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 2 சீசன்கள் மட்டுமே விளையாடி இருந்தாலும், தனது நிலையான பேட்டிங்கின் மூலம் ஒரு வலுவான டி20 நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, இந்திய அணிக்காகவும் விளையாடி வரும் மிக இளைய அறிமுக வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷியின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை, அதே சமயம் அவரது பேட்டிங் நுட்பம் (technique) உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்புகளைச் சுமத்த வேண்டாம். சூர்யவன்சி தனது தற்போதைய பேட்டிங் நுட்பத்தைக் கொண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் வெற்றி பெறுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்திய டி20 அணியில் அறிமுகமான சூர்யவன்ஷி, அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து 216.32 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன், 42.82 சராசரியில் 1670 ரன்கள் குவித்துள்ளார். அதே வேளையில், முதல் தரக் கிரிக்கெட்டில் (First-Class cricket) அவரது புள்ளிவிவரம் 17 இன்னிங்ஸ்களில் 23.47 சராசரியுடன் 399 ரன்களாக மட்டுமே உள்ளது. இது குறித்து 'பியான்ட்23 கிரிக்கெட் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பேசிய பனேசர், சூர்யவன்சி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மாறுவார் என்று என்னால் பார்க்க முடியவில்லை. ஹேரி புரூக் மட்டுமே தற்போது டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரண்டின் தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர். ஆனால், சூர்யவன்சியிடம் அதற்கான பேட்டிங் நுட்பம் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.. இருப்பினும், பனேசரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெற்றி பெறுவார் சூரியவன்ஷி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று நவீன கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். இது குறித்து மேலும் கூறிய க்ளார்க், ஒருவரால் இன்னும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலியும் ஏபி டி வில்லியர்ஸும் அதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்கள் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாகவும், நம்பமுடியாத டி20 வீரர்களாகவும் இருந்தார்கள். சூர்யவன்ஷி போன்ற இந்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மாறினால், அதைப் பார்ப்பது மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறாரா என்பதும் ஒரு கேள்வியாக இருக்கும்," என்று கூறினார். முதல் தரக் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷியின் மிகச்சிறந்த ரன் எண்ணிக்கையான 93, கடந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற துலீப் டிராபி அரையிறுதியில் ஈஸ்ட் ஜோன் அணியின் வெற்றியின் போது பதிவு செய்யப்பட்டது. அந்தத் தொடரின் போது அவர் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் ஆப்கானிஸ்தானை 3-0 என வீழ்த்திய இந்திய டி20 அணியில் சூர்யவன்சி இடம் பெற்றிருந்தார், ஆனால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சூர்யவன்சி தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக டி20 அணியுடன் ஜப்பான் செல்லவுள்ளார். இதன் மூலம் இந்த ஆசியப் தொடரில் பங்கேற்கும் ஒட்டுமொத்த இந்தியக் குழுவிலும் மிக இளைய உறுப்பினராக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஆட்ட நுணுக்கம் அவரிடம் இல்லை; எல்லா வடிவங்களிலும் வெற்றி பெற முடியாது: சூர்யவன்ஷி பற்றி முன்னாள் வீரர் கருத்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk