SIR சர்ச்சை| தேர்தல் ஆணையத்துக்குள் பிளவு? எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
SIR சர்ச்சை| தேர்தல் ஆணையத்துக்குள் பிளவு? எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!

SIR எனப்படும் Special Intensive Revision குறித்து தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது. செய்தியாளர் - M.மீரா SIR எனப்படும் Special Intensive Revision தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் SIR தொடர்பான முடிவுகள் குறித்து குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த எதிர்ப்பு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6-ல் SIR தொடர்பான கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு விதிகளில் திருத்தம் தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கட்டுப்பாடு டெல்லியில் வைத்திருப்பது குறித்தும் இரு தேர்தல் ஆணையர்களும் கவலை தெரிவித்ததாகவும், இது மாநில அளவிலான அதிகாரிகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்களை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி, வெளியான தகவல்கள் உண்மையாக இருந்தால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகள் எழுவதாகவும், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் தேர்தல் ஆணையம் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை மறுத்துள்ளது. ஆணையத்தின் தரப்பில், அனைத்து முடிவுகளிலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் கையெழுத்தும் இருந்ததாகவும், சந்து மற்றும் ஜோஷி சில கருத்துகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தாலும், அவற்றை முழுமையான எதிர்ப்பு எனக் கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், SIR நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் உண்மையில் கருத்து வேறுபாடு இருந்ததா என்பது குறித்து தற்போது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக விவாதம் தீவிரமடைந்துள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை