திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? IIT-களில் 53 மாணவர்கள் உயிரிழப்பு – மாணிக்கம் தாகூர் கண்டனம்! “உடலுறுப்பு தானம் மகத்தான மனிதநேயச் செயல்” – முதலமைச்சர் விஜய் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ : அக்.16-ஆம் தேதி ரிலீஸ்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறையை குழந்தைகளின் உயிரை காப்பதில் காட்ட வேண்டும்!” – கனிமொழி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk