சிக்கிமில் பெய்து வரும் அதி கனமழையால் ரும்பி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மற்றும் அரசு குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. "நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது" என முதல்வர் எச்சரித்துள்ள நிலையில், மேலும மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஓய்வின்றி பெய்து வரும் அதி கனமழை, சிக்கிம் மாநிலத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வியாழக்கிழமை இரவு ரும்பி (Rimbi) கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவு, அங்கிருந்த வீடுகள், அரசு குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சொத்துக்களை அடித்துச் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலம் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள ரும்பி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளும் அரசு சொத்துக்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மலைச்சரிவுகள் ஆபத்தான முறையில் நெகிழ்ந்துள்ளதால் நிலைமை தீவிரமாக இருப்பதாகப் பேரழிவு மேலாண்மைத் துறையும், முதல்வர் பிரேம் சிங் தமாங்கும் எச்சரித்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: கடந்த சில நாட்களாக ஓய்வின்றி பெய்து வரும் அதி கனமழை, சிக்கிம் மாநிலத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வியாழக்கிழமை இரவு ரும்பி (Rimbi) கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவு, அங்கிருந்த வீடுகள், அரசு குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சொத்துக்களை அடித்துச் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. #WATCH | Sikkim | A major landslide in the Rimbi area has left more than 30 houses affected. The incident was triggered by heavy mudslides and debris coming down from the upper slopes, sending large quantities of mud, rocks and other debris towards the lower areas(Video source:… pic.twitter.com/5rhBlSoiTB மலைச்சரிவுகளில் இருந்து ராட்சத பாறைகளும், டன் கணக்கில் சேறும் சகதியும் குடியிருப்புகளை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்து வந்ததில் கிராமமே நிலைகுலைந்து போயுள்ளது. நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நிலச்சரிவின் தாக்கம் அங்கு பெரும் அச்ச அலையை உருவாக்கியுள்ளது. கொடூரமான மழையால் மலைச்சரிவுகளின் மண் முற்றிலும் பலமிழந்து, நெகிழ்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் எந்தக் கணத்திலும் இதைவிடப் பெரிய அளவிலான நிலச்சரிவு தாக்கும் என்ற பீதியில் மக்கள் உறைந்துபோயுள்ளனர். நிலச்சரிவு வரும் வழியிலேயே பல வீடுகள் அமைந்துள்ளதால், அபாயத்தை உணர்ந்த கிராமவாசிகள் தங்களது அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பதறியடித்து ஓடுகின்றனர். "சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாய் மாறிக் கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்தே இந்தப் பாதைகளைக் கடக்க வேண்டியுள்ளது. மழை இன்னும் தீவிரமடைந்தால், மண் மேலும் தளர்ந்து ஒட்டுமொத்தப் பகுதியையும் சரிவு விழுங்கிவிடும்," எனப் அப்பகுதிவாசி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார். "நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது" - முதல்வர் பிரேம் சிங் தமாங் வேதனை இந்தத் திடீர் பேரிடர் குறித்து சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தனது எக்ஸ் பக்கத்தில் கவலையைப் பகிர்ந்துள்ளார்: "கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள ரும்பி கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட கொடூர நிலச்சரிவு செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. மக்களின் பாதுகாப்பும் நலனுமே நமது அரசின் முதல் முக்கியத்துவம்." அதிகாரிகள் அனைவரும் 24 மணி நேரமும் அதிவிரைவு எச்சரிக்கை நிலையில் இருக்குமாறும், கள நிலவரத்தை உடனுக்குடன் கண்காணித்து மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. "தொடக்கத்திலிருந்தே மக்கள் சந்தித்து வரும் இந்தத் துயரத்தையும் நிச்சயமற்ற சூழலையும் நான் உணர்கிறேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் என் பிரார்த்தனைகள் தொடரும். அனைவரும் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை & சேத மதிப்பீடு மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க, கேபி திங்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷெரிங் டி பூட்டியா தலைமையில், எஸ்.டி.ஆர்.எஃப், பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ) மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய பல்துறை குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. காங்டாக் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறை இடிபாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சேதமதிப்பீடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முடங்கிய போக்குவரத்து: லுயிங்-ரங்கா நெடுஞ்சாலை, போஜோஹரி, லிங்டிங், உயர் நீதிமன்றச் சாலை, பாங்தாங்-லிங்டோக் சாலை உட்பட பல முதன்மைச் சாலைகளில் இடிபாடுகள் குவிந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அரசுச் சொத்துக்கள் சேதம்: சிச்சே பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. என்சே பள்ளி அருகே உள்ள 33/11 கேவி மின் நிலையத்தைச் சுற்றி சேறு குவிந்துள்ளதால் அசம்பாவிதங்களைத் தடுக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தாங்கிப் பிடிக்கும் தார்பாய்கள்: மேலும் மழைநீர் மண்ணுக்குள் இறங்கி நிலச்சரிவு தீவிரமடையாமல் இருக்க, ஆபத்தான சரிவுப் பகுதிகளில் பிரம்மாண்ட தார்பாய் தாள்களைக் கொண்டு மூடப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சிக்கிமில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் மலைச்சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், சுவர்களில் விரிசல், மண் நகர்வு அல்லது கற்கள் உருண்டு விழுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சிக்கிமில் கொட்டித் தீர்க்கும் கனமழை: கிராமத்தை சுருட்டி எறிந்த நிலச்சரிவு; பதைபதைக்க வைக்கும் பகீர் வீடியோ
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk