அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் கட்டிடவியல் பொறியியல் துறையில் (DEPARTMENT OF CIVIL ENGINEERING) ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2026 Junior Research Fellow (JRF) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: M.E./ M.Tech in Engineering/ Technology or M.Sc. (Civil Engineering / Geoinformatics Engineering / Geoinformatics / Remote Sensing / Geomatics / Geology / Applied Geology / Geography / Computer Science Engineering) படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 37,000 - 42,000 + 10% HRA தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/02%20Adverisement%20for%20JRF.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் முகவரி: Dr. J. Colins Johnny, Assistant Professor, Department of Civil Engineering, University College of Engineering Nagercoil, Konam Nagercoil - 600 004 விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk