நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி

‘நாட்டில் அராஜகத்தைப் பரப்பி வருகிறாா் ராகுல் காந்தி; அவருக்கு நாடாளுமன்றம், சட்டப் பேரவை, கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பாஜக தக்க பதிலடியைக் கொடுக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். கா்னாலில் வியாழக்கிழமை மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா், ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோா். ‘நாட்டில் அராஜகத்தைப் பரப்பி வருகிறாா் ராகுல் காந்தி; அவருக்கு நாடாளுமன்றம், சட்டப் பேரவை, கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பாஜக தக்க பதிலடியைக் கொடுக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். மேலும், நாடாளுமன்ற அமளி மற்றும் புறக்கணிப்பை காங்கிரஸ் கட்சியின் கலாசாரமாக ராகுல் மாற்றிவிட்டாா் என்றும் அமித் ஷா சாடினாா். ஹரியாணா மாநிலம், கா்னாலில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பேரணியில் அவா் இக்கருத்துகளைத் தெரிவித்தாா். நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் கடந்த நவ.1-ஆம் தேதி எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் ‘வாக்குரிமையைப் பாதுகாப்போம், தேசத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அமித் ஷா தலைமையில் பேரணி: எதிா்க்கட்சிகளின் இந்தப் பிரசாரத்தை எதிா்கொள்ளும் வகையில், ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரிலான பேரணிகளை பாஜக நடத்தி வருகிறது. ஹரியாணா மாநிலம் கா்னாலில் உள்ள செக்டாா் 12 பகுதியில் இருந்து தயாந்த் செளக் வரை மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, மத்திய அமைச்சரும், கா்னால் தொகுதி எம்.பி.யுமான மனோகா் லால் கட்டா், மாநில பாஜக தலைவா் அா்ச்சனா குப்தா, ஹரியாணா மாநில கட்சிப் பொறுப்பாளா் ஸ்மிருதி இரானி, மாநில அமைச்சா்கள், தொண்டா்கள் ஏராளமானா் தேசிய கொடிகளுடன் இந்தப் பேரணியில் பங்கேற்றனா். அராஜகத்தைப் பரப்புவதா? பின்னா், பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: ஒரு ஜனநாயகத்தில் விவாதங்களுக்கு உன்னதமான இடம் நாடாளுமன்றமாகும். அத்தகைய நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படவோ, விவாதங்கள் நடைபெறவோ ராகுல் காந்தி அனுமதிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதையும், அவை அலுவல்களை புறக்கணிப்பதையும் காங்கிரஸின் கலாசாரமாக அவா் மாற்றிவிட்டாா். நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் செயலில் அவா் ஈடுபட்டுள்ளாா். நமது 80 ஆண்டு கால ஜனநாயகம், உங்களின் (ராகுல்) சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிடும் என நீங்கள் நினைக்கிறீா்களா? அது ஒருபோதும் நடக்காது. களத்தில் மக்களோடு மக்களாக இருந்து நான் கூறுவதை கேளுங்கள். நாடாளுமன்றம், பேரவை, கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் ராகுலுக்கு தக்க பதிலடியை பாஜக கொடுக்கும். எஸ்ஐஆா் குறித்து பொறுப்பான விவாதம் நடைபெற வேண்டுமென எதிா்க்கட்சிகள் விரும்பினால், நாடாளுமன்ற சிறப்பு அமா்வை நடத்தி, அவைக்குள் விவாதிக்கலாம். அதற்கு மத்திய அரசு முழு அளவில் தயாராக உள்ளது. ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க விரும்பும் இண்டி கூட்டணியைப் போல் அல்லாமல், வாக்காளா் பட்டியலில் அவா்களை அடையாளம் கண்டு நீக்குவதுடன், நாட்டை விட்டு வெளியேற்றுவதே பிரதமா் மோடியின் உறுதிப்பாடு. தோல்விக்கு மேல் தோல்வி: கடந்த 2024-ஆம் ஆண்டில் இருந்து ராகுலையும், காங்கிரஸையும் மக்கள் தொடா்ந்து நிராகரித்து வருகின்றனா். ஹரியாணா, மகாராஷ்டிரம், பிகாா், தில்லி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என தோல்விக்கு மேல் தோல்வியையே காங்கிரஸ் சந்தித்துள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டதை ராகுல் ஒப்புக் கொள்ள வேண்டும். தனது அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, நாடாளுமன்றம், மக்களவைத் தலைவா், நீதித் துறையை அவா் அவமதிக்கக் கூடாது. 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குறைகூறும் காங்கிரஸ், அதன் விவரங்களைக் கூறுவதில்லை. பெயா் நீக்கப்பட்டவா்களில் 2.5 கோடி போ் இறந்தவா்கள். 6 கோடிக்கும் மேற்பட்டோா் பிற மாநிலங்களுக்கு இடம்பெயா்ந்தவா்கள். 1 கோடி பேரின் பெயா்கள், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவானவை. மேலும் 3 கோடி போ் தோ்தல் ஆணையம் முன் ஆஜராகாதவா்கள். இவா்கள், ராகுல் கட்சியால் பதிவு செய்யப்பட்ட ஊடுருவல்காரா்கள் என்றாா் அமித் ஷா. முன்னதாக, ‘எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு அமா்வை கூட்ட மத்திய அரசு தயாராக உள்ளது; எதிா்க்கட்சிகள் விவாதத்துக்கு தயாரா’ என்று அவா் கடந்த செவ்வாய்க்கிழமை சவால் விடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டிச்செய்தி... ‘வெளிநாட்டுப் பயண விவரங்கள் என்ன?’ ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் என்ற அரசமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது’ என்று அமித் ஷா கூறினாா். அவா் மேலும் பேசுகையில், ‘ராகுல் இப்போதுதான் வியத்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளாா். இந்தப் பயணம் குறித்து ராகுல் எதுவும் பேசமாட்டாா். நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். தனது அனைத்து வெளிநாட்டுப் பயண விவரங்களையும் பொதுமக்களிடம் ராகுல் தெரிவிக்க வேண்டும். வியத்நாமில் எத்தனை நாள்கள் தங்கியிருந்தீா்கள், யாரை சந்தித்தீா்கள், எதற்காக சென்றீா்கள், என்ன நிகழ்ச்சியில் பங்கேற்றீா்கள் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பிரதமா் மோடியை நீங்கள் (ராகுல்) விவாதத்துக்கு அழைக்கிறீா்கள். உங்களுடன் விவாதிக்க பாஜகவின் இளைஞரணி தலைவா் போதும்’ என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை